மன்னார்-முசலியில் தொழில் அற்றோருக்கான தொழில் வாய்ப்பு
மன்னார் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கு நோக்கோடு கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக ஆரம்பித்து வைக்கப்பட உள்ள கைத்தொழில் பேட்டைக்கான 1000 வேலை ஆட்களை சேர்த்து கொள்வது சம்மந்தமான கலந்துறையாடல் கடந்த திங்கள் கிழமை நானாட்டான் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று மாலை 4 மணியளவில் சிலாவத்துறையில் உள்ள மீள்எழிர்ச்சி கட்டத்தில் கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சர் றிசாத் பதீயுதின் அவரின் வேண்டுகோளின் பெயரில் அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் சரீப் தலைமையில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.
அரிப்பு,சவேரியார்புரம்,மருதமடு மற்றும் கொக்குபடயான் அது போன்ற இன்னும் முசலியில்; உள்ள தமிழ் பிரதேசத்தில் இருந்து 145 அதிகமான படித்த யுவதிகள் வருகை தந்திருந்தனர்.
இந்த கைத்தொழில் பேட்டையினால் மன்னார் மாவட்டத்தில் படித்து விட்டு வீட்டில் இருக்கின்ற யுவதிகஞக்கும்,இளைஞர்களுக்கும் மற்றும் யுத்ததினால் தங்களின் வாழ்கையினை சிதறடித்தவர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தினை ஊயர்த்திக் கொள்ள வழி அமைக்கும்.
எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னார்-முசலியில் தொழில் அற்றோருக்கான தொழில் வாய்ப்பு
Reviewed by NEWMANNAR
on
March 07, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 07, 2013
Rating:



No comments:
Post a Comment