யுத்த பாதிப்பிற்குள்ளான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் யுத்த பாதிப்புக்குள்ளான 500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை தட்சனா மருதமடு பாடசாலையில் இடம்பெற்றது.
கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யுத்த பாதிப்பிற்குள்ளான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு
Reviewed by Admin
on
March 12, 2013
Rating:
No comments:
Post a Comment