அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்கள் கௌவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 01 ஆம் திகதி மாலை 2 மணிக்கு மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இடம் பெறவுள்ளதாக மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் மீரா முகைதின் முஹம்மது சியான் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டிற்காண பாடவிதானம் மற்றும் இணைப்பாட விதானம் ஆகியவற்றில் மாகாண மட்டம்,தேசிய மட்டம் ஆகியவற்றில் சாதனை புரிந்த சாதனையாளர்கள் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதியூதின் அவர்களும்,கௌரவ விருந்தினராக வடமாகான ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி அவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் மீரா முகைதின் முஹம்மது சியான் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் சாதனையாளர்கள் கௌரவிப்பு Reviewed by Admin on March 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.