மன்னார் நகரசபை கூட்டத்தில் கண்டனத்தீர்மானங்கள் நிறைவேற்றம்.
மன்னார் நகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இடம் பெற்ற போது பல்வேறு வேளைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு கண்டனத்தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் சந்தை பகுதியில் அமைந்தள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையம் பல மாதங்களாக இயங்காத நிலையில் உள்ளது.இந்த நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி தொடங்கம் அந்த மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்லோம்.
-தொடர்ந்தும் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்லோம்.மன்னார் பொலிஸாருடன் இணைந்து சில வேளைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
-இதே வேளை கடந்த காலங்களில் மன்னாரில் கொடுர செயலாக காணப்படுகின்ற இனங்களுக்கிடையிலும்,மதங்களுக்கிடையிலும் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் சொரூபங்கள் உடைத்தல்;,பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளுதல் போன்ற சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.
கடந்த காலங்களில் கிரீஸ் பூதம் என்பது எவ்வாறு உருவாக்கப்பட்டதோ அதே போன்றுதான் தற்போது சொரூபங்கள் உடைத்தல்,பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றமை போன்ற செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக அடம்பன் பகுதியில் உள்ள கண்ணாட்டி கிராமத்தில் பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த திருச்சொரூபம் ஒன்று உடைக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிராக கண்டனத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.அது மட்டும் இன்றி மதகுரு ஒருவரை அதிகாரி ஒருவர் அவதூராக பேசியுள்ளார்.
அதற்கு எதிராக மக்கள் கண்டண ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.தற்போதைய காலத்தில் எந்த மதத்தைச் சேர்ந்த மதகுருவாக இருந்தாலும் ஆன்மீகத்தை மட்டுமின்றி மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட மதகுருக்களை இழிவு படுத்துகின்றமையினை இந்த சபை வண்மையாக கண்டித்துள்ளது.
மக்களில் பிரச்சினைகளை தாங்கி வருகின்ற பத்திரிக்கைகள் குறிப்பாக உதயன் பத்திரிக்கையின் பணியாளர்களும் அலுவலகங்களும் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் உதயன் பத்திரிக்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்தது.தற்போதும் மக்களின் பிரச்சினையை தொடர்ந்தும் வெளிக்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் உதையன் பத்திரிக்கையின்; பணியாளர்கள் அலுவலகங்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதற்கு எதிராக கண்டனத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
-குறித்த தீர்மானத்தை மன்னார் நகர சபையின் உறுப்பினராகிய நான் முன்வைத்தேன்.அதனை சபையில் இருந்தவர்கள் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதாக அவர் தெரிவித்தார்.
மன்னார் நகரசபை கூட்டத்தில் கண்டனத்தீர்மானங்கள் நிறைவேற்றம்.
Reviewed by NEWMANNAR
on
April 27, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 27, 2013
Rating:

No comments:
Post a Comment