கொக்குத் தொடுவாய் மக்கள் ஆர்ப்பாட்டம்!

தமது வயல் நிலங்கள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் கிளர்ச்சி செய்தனர். மணலாறு என அழைக்கப்பட்ட தமிழ்க் கிராமத்தை வெலி ஓயா எனப் பெயர் மாற்றம் செய்த அரசு, அங்கு எண்பதுகளில் சிங்களவர்களைக் குடியேற்றியது. போரால் அவர்கள் வெளியேறி இருந்தனர்.
இப்போது அவர்கள் அரசாலும் இராணுவத்தாலும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கே ஜனாதிபதி நிலங்களை நேற்றுக் கையளித்தார். தமிழர்கள் அதனை எதிர்க்கின்றனர்.
தமிழ் மக்களின் காணிகளை சிங்களவர்களுக்கு உரிமையாக்கும் அனுமதிப்பத்திரம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது:
இந்தப் பிரதேசங்களில் வசித்த தமிழ் மக்கள் இராணுவத்தினால் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் இங்கு சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.
இவர்கள் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல்களை அடாவடித்தனமாக கைப்பற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.
அரசாங்கம் நேற்று தமிழ் மக்களின் உறுதியுள்ள காணிகளை சிங்கள மக்களுக்கு உரிமையாக்கும் அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
அரசாங்கமே இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை யாரிடம் முறையிட முடியும்.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அது இழுத்தடிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் விரக்தியின் எல்லைக்கே செல்லும் நிலைதான் உருவாகி வருகின்றது என்றும் அவர் கூறினார்.
கொக்குத் தொடுவாய் மக்கள் ஆர்ப்பாட்டம்!
Reviewed by NEWMANNAR
on
April 21, 2013
Rating:

No comments:
Post a Comment