மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

இப்பொதுக் கூட்டமானது வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி குழு தலைவருமாகிய கௌரவ உனேஸ் பாருக் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உயரதிகாரிகளான கேளி சில்வைரா கிரிசாந்த பெரேரா அணுர டி சில்வா இ காமினி ரந்தனிய இ நில் ஒபேசிறி இ றோகித ஆகியோருடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிநிதி திலக் அல்போன்சு அவர்களின் முன்னிலையில் 21.04.2013 இன்று காலை மன்னார் லுஆஊயு மண்டபத்தில் பல எதிர் கருத்தமர்வுகளின் மத்தியில் நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகத்தின் தலைவர்களின் பதவிகளுக்கு போட்டியிட்ட இருவர்களில் ஒருவர் தாமாகவே விலகிக்கொண்டதற்கமைய தலைவராக திரு அன்ரன் தங்கேஸ்வரன் அவர்கள் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். தொடர்ந்து செயலாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் திரு ப.ஞானராஜ் அவர்கள் மொத்தமாக உள்ள 17 வாக்குகளில் ( ஒரு கழகத்திற்கு ஒரு வாக்கு மட்டுமே) 11 வாக்குகள் பெற்று மேலதிக 5 வாக்குகளால் புதிய செயலாளராக தெரிவுசெய்யப்பட்டார். தொடர்ந்து உபதலைவர்கள் பதவிகள் 4 ற்கு 4 பேரே போட்டியிட்டதால்; திரு ஜெரால்ட் டேவிட்சன் இ அருள் மகிமைராஜ் இ ஜெகநாதன் இ தயாபரன் குருஸ் ஆகிய நால்வரும் தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவர் வருகை தராததால் திரு கோல்டன் டெனி தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் உப செயலாளராக திரு சிவேந்திரன் அவர்களும் உப பொருளாளராக திரு சியாம்சன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
தொடர்ந்து வருகை தந்திருந்த கழகங்களுக்கு தலா 5 பந்துகள் விதம் வழங்கப்பட்டது.
இங்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி குழு தலைவருமாகிய கௌரவ உனேஸ் பாருக் அவர்களினால் உதைபந்தாட்டத்தின் அவசியம் பற்றியும் கழகங்களின் ஒற்றுமை பற்றியும் மன்னாருக்கு தான் உதைபந்தாட்டம் மேலும் வலுப்பெற சகல உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். திரு கேளி சில்வைரா அவர்களும் இவ்வாறான கருத்திலே உரையாற்றினார்.
இறுதியாக புதிய நிர்வாக செயலாளரினால் நிகழ்த்தப்பட்ட நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இதன் மூலம் பல கால சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டு சிறப்பாக இயங்கக்கூடிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய சிறந்த உதைபந்தாட்ட சங்கம் இன்று மன்னாரில் அமைக்கப்பட்டுள்ளது.
ப.ஞானராஜ் பொதுச்செயலாளர்
மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் தெரிவு
Reviewed by NEWMANNAR
on
April 22, 2013
Rating:

No comments:
Post a Comment