அண்மைய செய்திகள்

recent
-

தேசிய அடையாள அட்டைக்கான வயதெல்லை குறைக்கப்படவுள்ளது


தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையை 15ஆகக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கு அமைவாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சரத் குமார குறிப்பிட்டார்.


இதன்பொருட்டு தேவையான சட்ட நடைமுறைகளைத் தயாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக 16 வயதில் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதில் நிலவுகின்ற சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளை வெகுவாகத் தவிர்க்க முடியும் என்றும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

உத்தேச இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டை விநியோகத்தின் போது அதனைப் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையை 15 ஆகக் குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அடையாள அட்டைக்கான வயதெல்லை குறைக்கப்படவுள்ளது Reviewed by NEWMANNAR on April 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.