டக்ளஸ் ஐ விரட்டியடிப்போம்-போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர்
இது தொடர்பாக போரால் பாதீக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,
அமைச்சர் டக்லஸ் தேவானந்த அவர்களுக்கு எராகவும்,அவர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராகவும் மக்களை விளிர்ப்பூட்டும் வகையில் இன்று கிளிநொச்சியில் எனது தலைமையில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றோம்.ஏனைய இடங்களில் எமது ஆதரவாலர்கள் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,,,
* மணல் விநியோக ஏகாதிபத்திய நிறுவனமான மகேஸ்வரிநிதியத்தினால் கடந்த 04 வருடங்களில் மண்கொள்ளை மூலம் பொதுமக்களின் பணம் ருபா 4,000 மில்லியன் கொள்ளையடித்தது போதாதா? டக்ளசே மண் கொள்ளையை நிறுத்து!
* 2009இல் வடபகுதி மக்களின் கடலுணவு, விவசாயப் பொருட்களை கொழும்புக்கு அனுப்பிய போதும், அத்தியாவசியமான பொருட்களை கொழும்பிலிருந்து இறக்குமதி செய்தபோதும் கப்பம் பெற்று கொள்ளையடித்த பொதுமக்களின் கோடிக்கணக்கான ரூபா பணம் எங்கே? டக்ளசே பதில் சொல்!
* 1995 இலிருந்து இன்றுவரை தமிழர்களின் பாரம்பரிய பூமியில் நடைபெறும் அராஜகங்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவே பொறுப்பு கூறு.
* தமிழர் பகுதியில் நடைபெறும் கலாச்சார சீரழிவுகளுக்கு, டக்ளஸ் தேவானந்தாவே உமது அதிகார துஷ்பிரயோக ஆட்சியே காரணம்.
* சிறுவர் காப்பகங்களில் துஷ்பிரயோகம் தமிழ் பெண்கள், சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. டக்ளஸ் தேவானந்தாவே பதில் கூறு.
* 20,000 ற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியோட்டம். தமிழர்களின் ரூபா 36,000,000,000.00 (முப்பத்தாறாயிரம் மில்லியன் ரூபா) மூலதனம் இழப்பு, தமிழனை சொந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழவைக்க வக்கற்ற டக்ளசே நாட்டை விட்டு வெளியேறு..
* மண் வியாபாரத்தை நம்பி வாகனம் வாங்கிய உழவு இயந்திர உரிமையாளர்களுக்கும், மற்றும் பார ஊர்தி (டிப்பர்,லொறி) உரிமையாளர்களுக்கும், வருமானம் இல்லை. மக்களுக்கு போட்டியாக தொழில் செய்யாதே.... டக்ளசே உன் தொழில்களை நிறுத்து.....
* கந்துவட்டி கொடுமையால் வியாபாரிகளும், பொதுமக்களும் சாவின் விளிம்பில்! மக்கள் பணத்தை கொள்ளையடித்த நீ மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கினாய்?
* நம்பி வந்த இளைஞர்களை நடுத்தெருவில் விட்ட டக்ளஸ் தேவானந்தாவே நாட்டை விட்டு வெளியேறு. உம்முடன் நின்ற இளைஞர்களுக்கு எதிர்காலம் என்ன?
*தமிழ் மக்களை தொடர்ந்து பயப்பீதியில் வைத்திருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை விரட்டியடிப்போம்.
*தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு துணைபோகும் டக்ளஸ் தேவானந்தாவே நாட்டை விட்டு வெளியேறு.
*யுத்தம் முடிந்த பிறகு தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய ரூபா 2,300,000,000,000.00 ( இருபத்து மூன்று இலட்சம் கோடி ரூபா) மூலதனத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ள டக்ளசே நாட்டை விட்டு வெளியேறு.
*புலிகள் இருந்தபோது மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற வீரவசனம், இப்போது மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் கோவண ஆட்சியா? கொள்கையை என்ன விலைக்கு விற்றீர்? டக்ளசே பதில் கூறு? தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளை ஒவ்வொன்றாக முறியடிப்போம்....! சாத்தானை விரட்டியடிப்போம்...!!
முதல் கட்டமாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் நடைபெறும் டக்ளசின் மண்கொள்ளைக்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள்வோம், தமிழ் மக்களை பயப்பீதியிலிருந்து மீட்டெடுப்போம். டக்ளசின் அராஜக ஆட்சி ஒழிக! அதிகார துஷ்பிரயோகம் ஒழிக!! ஊழல் ஆட்சி ஒழிக!!!என குறிப்பிடப்பட்டுள்ளது.
டக்ளஸ் ஐ விரட்டியடிப்போம்-போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர்
Reviewed by Admin
on
May 05, 2013
Rating:

No comments:
Post a Comment