முசலிச் சந்தியில் இருந்த பயணிகள் தரிப்பிடம் மீள் நிர்மாணம் செய்யப்படுமா?
அங்கு ஏற்பட்ட யுத்தத்தால் அக்கட்டிடம் முற்றாக அழிக்கப்பட்டது.கூழாங்குளம்,வாரிவெளி,சிறுக்குளம் ,முசலி போன்ற பிரதேச மக்களும்,முசலி மஹிந்தோதய பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஏனைய அரசஊழியர்கள் போன்றோரும் இச்சந்தியைப் பயன்படுத்திவருகின்றனர்.
ஆனால்,இதுவரை சிதைவடைந்து காணப்படும் பயணிகள் தரிப்பிடம் மீள்நிர்மாணம் செய்யப்படவில்லை. இச்சந்திக்கு வருகைதரும் பயணிகள் மழையிலும்,வெயிலிலும் துன்பப்படுவதை அவதானிக்கக் ;கூடியதாகவுள்ளது.இப்பிரதேச மக்கள் மீளக்குடியேறி பல வருடங்கள் உருண்டோடிய பின்பும் இப்பயணிகள் தரிப்பிடம் மீள்நிர்மாணம் செய்யப்படாததையிட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தரிப்பிடமின்றி பயணிகள் தமது பொருட்களுடன் வீதியோரங்களில் வெயிலில் நிற்பதையும்,சிதைவடைந்த பயணிகள் தரிப்பிடத்தின் எச்சங்களையும் படங்களில் காணலாம். இப்பிரதேச மக்களின் நன்மைகருதி இப்பயணிகள் தரிப்பிடக்கட்டிடத்தை அதே இடத்தில் மீள்நிர்மாணம் செய்து தருமாறு முசலிப் பிரதேசத்தலைவர் ,தேசமான்ய அ.வ.எஹியான் அவர்களிடம் மக்கள் கோரிக்கைவிடுகின்றனர்.
(கே.சி.எம்.அஸ்ஹர்)
முசலிச் சந்தியில் இருந்த பயணிகள் தரிப்பிடம் மீள் நிர்மாணம் செய்யப்படுமா?
Reviewed by Admin
on
May 25, 2013
Rating:

No comments:
Post a Comment