இன்று இரவு சீரற்ற காலநிலையால் மன்னாரில் ஓரளவு மழை
இன்று காலை 8. 30 முதல் பிற்பகல் 2.30 வரையான காலப் பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சியாக 216.1 மில்லிமீற்றர் மழை கட்டுநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வவுனியா பகுதியில் 59.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனினும் வட மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவியதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டின் கிழக்கு மற்றும் மலையகத்தில் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு சீரற்ற காலநிலையால் மன்னாரில் ஓரளவு மழை
Reviewed by Admin
on
May 03, 2013
Rating:

No comments:
Post a Comment