பாதையை அத்துமீறி ஆக்கிரமித்த வர்த்தக நிலையங்களின் பொருட்கள் அகற்றல்
மன்னார் பஸார் பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை விட அத்து மீறி பாதைகளில் வர்த்தக நிலைய பொருட்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக நிலையங்களின் பொருட்களை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உடனடியாக அகற்றியுள்ளார்.
மன்னார் நகர சபையால் குறித்த வர்த்தகர்களுக்கு தொடர்ந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவ் அறிவுறுத்தல்களையும் மீறி தமது வர்த்தக நிலையங்களின் பொருட்களை வீதிகளில் வைத்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தக நிலையங்களின் வர்த்தக பொருட்களை மன்னார் நகர சபை அகற்றியுள்ளது.
குறித்த வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக உள்ள கழிவு நீர் வாய்க்கால் மீது தமது வர்த்தக நிலையங்களை விஸ்தரித்து அதன் மீதும் வர்த்தக பொருட்கள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனால் பல மாதங்களாக குறித்த பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் துப்பரவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கழிவு நீர் வாய்க்கால் முழுவதும் பொழுத்தின் பை உற்பட கழிவுப்பொருட்கள்,கழிவு நீர் ஆகியவை கலந்த நிலையில் பாரிய துர்நாற்றம் வீசியதோடு,டெங்கு நுளம்பு பெறுகுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மன்னார் நகர சபையின் சுற்றிகரிப்பு பணியாளர்கள் குறித்த வர்த்தக நிலைய பொருட்களை அகற்றி குறித்த கழிவு நீர் வாய்க்காலினை துப்பரவு செய்தனர்.
இனி வரும் நாட்களில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையினை ஆக்கிரமித்து வியாபாரம் மேற்கொள்ளும் வியாபார நிலையங்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதோடு குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் குறித்த வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
May 27, 2013
Rating:
No comments:
Post a Comment