கனடாவிலுள்ள முக்கிய வீதிஒன்றிற்கு "வன்னி வீதி" எனபெயர் சூட்டப்படுகின்றது.
தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்.. தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு "வன்னி வீதி" என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது.
மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு இந்து வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ள்து. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர்கள் தொடர்ச்சியான சிறந்த சேவையின் பலனாக தமிழ் மக்கள் மட்டுமல்ல வேற்று இன மக்களும் அவரைப் பாராட்டுகின்றார்கள்.
அத்துடன் மார்க்கம் மாநகரசபையின் நகரபிதா திரு ஸ்கெப்பட்டி அவர்களின் நட்புக்கும் மரியாதைக்கும் உரியவராகவும் திரு லோகன் கணபதி இருப்பதும் தமி;ழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும். மேற்படி விடயம் தொடர்பாக மார்க்கம் நகரசபை விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி வன்னி வீதி என்று பெயர் சூட்டப்படும் இந்த வீதியில்தான் மிகவிரைவில் மார்க்கம் நகரசபையின் மிகப்பெரிய சனசமூக நிலையம் மற்றும் நூலகம் பூங்கா போன்றவை அமைந்துள்ள பொழுது போக்கு வளாகம் அமையவுள்ளது என்பதும். மேற்படி வன்னி வீதியானது காலகிரமத்தில் மார்க்கம் நகரத்தில் மட்டுமல்ல கனடா முழுவதிலும் புகழ்பெற்ற ஒரு வீதியாகத் திகழ்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக் களமாக விளங்கிய அந்த வீர மிகு பிரதேசத்தை மேற்குலக நாடுகளுக்கு பறைசாற்றும் ஒரு சாதனமாக அமையும் என்று மார்க்கம் நகரில் வாழும் முன்னாள் யாழ்ப்பாண கல்லூரியொன்றின் அதிபர் கூறியுள்ளார்.

Reviewed by Admin
on
May 10, 2013
Rating:

No comments:
Post a Comment