13ஆவது திருத்தச் சட்டம் இல்லை; நாடாளுமன்றத்தை த.தே.கூ புறக்கணிக்கும்; எச்சரிக்கிறார் சிவாஜிலிங்கம்

அண்மையில் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதற்கு பல்வேறு அமைப்புக்களினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேநேரம் ஜாதிக ஹெல உறுமய தனிப்பட்ட நபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளது. இதனை அமைச்சர் சம்பிக்க ரணவக்க சமர்ப்பிக்க உள்ளார்.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடாளுமன்றை புறக்கணிக்க நேரிடும்.
இவ்வாறான செயற்பாடுகளினால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டம் இல்லை; நாடாளுமன்றத்தை த.தே.கூ புறக்கணிக்கும்; எச்சரிக்கிறார் சிவாஜிலிங்கம்
Reviewed by NEWMANNAR
on
May 28, 2013
Rating:

No comments:
Post a Comment