வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இன்னிசைப் பொழுது- 2013”

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனா் திரு.ஜீ.ஏ.சந்திரசிறி அவா்களும் சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சின் செயலர் திரு.சி.சத்தியசீலனும் அழைக்கப்பட்டிருந்தனா். எனினும் ஆளுனா் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
வட மாகாண கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வடமாகாணப் பாடசாலைகளின் இசையாசிரியா்கள் மற்றும் இசையார்வம் மிக்க ஆசிரியா்கள் பலர் இசை ஆற்றுகைகள் சிலவற்றை நிகழ்த்தினா். அத்துடன் இந் நிகழ்வை பாடசாலை அதிபா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் , பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் கண்டுகளித்தனா்.
இங்கு உரை நிகழ்த்திய பலரும் இவ்வாறான இசை நிகழ்வுகள் இனி வரும் காலங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.
இங்கு உரை நிகழ்த்திய பலரும் இவ்வாறான இசை நிகழ்வுகள் இனி வரும் காலங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.
மேலும் இந்நிகழ்வில் பங்குகொண்ட வெளிமாவட்ட ஆசிரியா்கள் கருத்துத் தெரிவிக்கையில் “யாழில் மட்டும் இந் நிகழ்வுகளை நடாத்தாமல் தாம் சார்ந்த மாவட்டங்களிலும் நடாத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.
நிறைவாக வட மாகாண அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளாருடைய நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.
வட மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற “இன்னிசைப் பொழுது- 2013”
Reviewed by மன்னார் மன்னன்
on
June 30, 2013
Rating:

No comments:
Post a Comment