வட மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்படலாம்
வடக்கு மாகாணசபையை உருவாக்கும் பிரகடனத்தை நாளை மறுநாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்சானியா புறப்படுவதற்கு முன்னர் அவர் இது தொடர்பான பிரகடனத்தில் கையெழுத்திடுவார் என்று கருதப்படுகிறது.
அத்துடன் வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தும்படியும், அவர், தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு உத்தரவிடுவார். அதையடுத்து, இலங்கை தேர்தல் ஆணையாளர், வரும் ஜுலை 19 தொடக்கம் 25ம் நாள் வரையிலான காலப்பகுதியில் மாகாணசபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை அடுத்தமாதம் 5ம் நாள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக் கோரும் பணிகள் தாமதமாகியுள்ளதால், முன்னர் திட்டமிடப்பட்டதற்கு இரண்டு வாரங்கள் தாமதமாக, வரும் செப்ரெம்பர் 21ம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கொழும்பு ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்படலாம்
Reviewed by Admin
on
June 24, 2013
Rating:
No comments:
Post a Comment