அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கோட்டைக்கு பின்புறமாக வழங்கப்பட்ட அரச காணியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள பொலிஸார் அனுமதி மறுப்பு.

உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட கோந்தைப்பிட்டி கோட்டைக்கு பின்புறம் அமைந்துள்ள அரச காணிகள் பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளில்    அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள தற்போது பொலிஸார் அனுமதி மறுத்து வருவதாகவும் இது குறித்து கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.தயானத்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் அல்-அஸ்ஹர் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட கோந்தைப்பிட்டி கோட்டைக்கு பின்புறம் அமைந்துள்ள அரச காணிகள் பிரதேசச் செயலாளரினால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த காணிகளில்    அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள தற்போது பொலிஸார் அனுமதி மறுத்து வருகின்றனர்.


இவர்களின் இச்செயற்பாடு ஏன் என எமக்கு புரியவில்லை.ஏற்கனவே இப்பகுதியில் 13 குடும்பங்களும்,பள்ளிவாசல் மற்றும் மீன்வாடிகளும் உள்ளது.

குறித்த பகுதியில் அரச உதவித்திட்டத்துடன் 3 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளிவாசல் ஒன்றும் தற்போது உள்ளது.குறித்த பகுதியில் உள்ள ஏனைய மக்கள் தங்களினால் அமைக்கப்பட்ட தற்காலிக விடுகளில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

மிகவும் வருமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் இம் மக்கள் இடம் பெயர்ந்து தற்போது மீள் குடியமர்ந்த நிலையில் இந்த மக்களின் இருப்பிடம் தற்போது கேள்விக்குறியான நிலையில் உள்ளது.இதனால் மீள் குடியேற விரும்பும் ஏனைய மக்களும் மீள் குடியமர மறுக்கின்றனர்.

-எனவே இப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்கி தொடர்ந்தும் இந்த மக்கள் தங்கள் காணிகளில் அடிப்படை வசதிகளை பெற்று தமது குடியேற்றத்தை மேற்கொள்ள உரிமை வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்ளுவதாக மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.தயானத்தா விற்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த கடிதத்தின் பிரதி வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஸாட் பதீயுதீன் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-


(21-06-2013)
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கோட்டைக்கு பின்புறமாக வழங்கப்பட்ட அரச காணியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள பொலிஸார் அனுமதி மறுப்பு. Reviewed by NEWMANNAR on June 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.