அண்மைய செய்திகள்

recent
-

வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வன்னியில் நீண்டகாலமாக கடமையாற்றிவந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நாளை மறுமதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 

கிளிநொச்சி மாவட்டக் கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் வைபவம் நடைபெறுமென கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை தெரிவித்துள்ளது. 

இதன்போது 253 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.  முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 87 தொண்டர் ஆசிரியர்களுக்கும்  துணுக்காய் கல்வி வலயத்தில் 78 தொண்டர் ஆசிரியர்களுக்கும் மடு கல்வி வலயத்தில் 43 தொண்டர் ஆசிரியர்களுக்கும்  வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 24 தொண்டர் ஆசிரியர்களுக்கும் வடமராட்சி கிழக்கு கல்வி வலயத்தில் 30 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை கூறியுள்ளது. 
வன்னி தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் Reviewed by Admin on June 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.