முசலியில் தொழினுட்பக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும்
முசலிப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம். தமிழ் இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி ஒரு தொழினுட்பக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகள் பிழையான வழிகளில் சென்று விடாமல் பாதுகாக்க இப்படியான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும்,சுய தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கும்,வெளி நாட்டு வேலை வாய்புக்களையும்,அரச தொழில் வாயப்;புக்களையும் இலகுவாக பெற்றுக் கொள்ள இதனால் முடியும்.
தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கும், விவசாய துறைசார் உத்தியோகத்தர் பதவிக்கும், போக்கு வரத்துத்துறை தொழில் நுட்ப உத்தியோகத்தர், கடற் தொழில் துறைசார் உத்தியோகத்தர் பதவிக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோரே நியமிக்கப்பட்டுள்ளனர். காரணம் எமது ;பகுதியில் தொழில் நுட்பக் கல்வி கற்றோர் இன்மையே ஆகும். ஆகவே, எமது பகுதியில் இவ்வாறான ஓரு தொழில் நுட்பக்கல்லூரி அமைக்கப்படும்போது பிரதேசத்தின் விருந்திக்கு பாரிய பங்களிப்பாக அமையும்.
அம்பாறை மாவட்டத்தை எடுத்துப்பார்த்தால் பல தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. அவையாவன அம்பாறை ஹாடி தொழிநுட்பக்;கல்லூரி, சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரி, நிந்தவூர் தொழிநுட்பக் கல்லூரி, அக்கரைப்பற்று தொழிநுட்பக் கல்லூரி.
கடந்த காலங்களில் முசலிப் பிரதேச அரச திணைக்களங்களுக்கு நியமிக்கப்பட்ட பல வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப உத்தியேகத்தர்கள் தொழிலை இடையில் விட்டுச் சென்றனர்.அல்லது இட மாற்றம் பெற்றுச் சென்றனர்.
சிலாவத்துறை அரிப்பு வீதியில் ஐஸ் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச காணிக்கு அண்மையில் உள்ள காணிகளில் ஒரு தொழில்னுட்பக்கல்லூரியை அமைக்க முடியுமென புத்தி ஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனைச் செய்து முடிப்பதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும்,; பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் அவர்களும், முசலிப் பிரதேசத்தவிசாளர் எஹ்யான் வஹாப் அவர்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்மென இப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
(முசலியூர் கெ.சி.எம்.அஸ்ஹர்)
முசலியில் தொழினுட்பக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:

No comments:
Post a Comment