பல்கலை. பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை - உயர்கல்வி அமைச்சு
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் மாணவர் விவகார பணிப்பாளர் நாயகம் கீர்த்தி சுரங்ஜித் மாவெல்லகே தெரிவித்தார்.
பகிடிவதை வழங்கியமை உறுதியாகும் மாணவர்கள் தொடர்ப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பல்கலை. பகிடிவதைக்கு எதிராக கடும் நடவடிக்கை - உயர்கல்வி அமைச்சு
Reviewed by NEWMANNAR
on
June 01, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 01, 2013
Rating:

No comments:
Post a Comment