அண்மைய செய்திகள்

recent
-

உயர் அச்சுறுத்தலுக்கானவர்களுக்கே பிரித்தானிய விசா பிணை!

பிரித்தானியாவுக்கு செல்லும் உயர் அச்சுறுத்தலாக கருதப்படும் இலங்கையர்களுக்கே முன்பிணை கோரப்படவுள்ளது. தவிர ஏனைய அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இந்த பிணை கோரப்படமாட்டாது என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயம் அறிவித்துள்ளது.


இந்த நவம்பர் முதல் ஒரு வருடத்துக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டத்தின்படி வயது வந்த ஒருவருக்கு 3000 பவுண்கள் பிணையாக கோரப்படவுள்ளன. விஸா மோசடியை தடுக்கும் முகமாகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது

விசா முடிவடைந்த பின்னரும் பிரித்தானியாவில் தங்கியிருப்பவர்களை கட்டுப்படுத்துவது உட்பட்ட மோசடிகளுக்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அச்சுறுத்தலுக்கானவர்களுக்கே பிரித்தானிய விசா பிணை! Reviewed by NEWMANNAR on June 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.