வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட ஆளணி வெற்றிடங்களிற்கு புதிய நியமனங்கள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் 74 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களும் 685 சிற்றூழியர் நியமனங்களும் வழங்கப்பட்டன.
பாடசாலை சிற்றூழியர்களாக மன்னார் மாவட்டத்தில் 89 பேரும், வவுனியா மாவட்டத்தில் 109 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 63 பேரும் நியமனம் பெற்றுள்ளார்கள். விவசாய சிற்றூழியர்களாக மன்னார் மாவட்டத்தில் 23 பேரும், வவுனியா மாவட்டத்தில் 27 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 48 பேரும் நியமனம் பெற்றுள்ளார்கள். சுகாதார சிற்றூழியர்களாக மன்னார் மாவட்டத்தில் 101 பேரும், வவுனியா மாவட்டத்தில் 60 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 165 பேரும் நியமனம் பெற்றுள்ளார்கள்.
சமயத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கனகரட்ணம், வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.கிஷோர், ஜனாதிபதியின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. சுமதிபால, வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட ஆளணி வெற்றிடங்களிற்கு புதிய நியமனங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 12, 2013
Rating:

No comments:
Post a Comment