முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மின்சாரப் பிரச்சினை
திடீர் திடீரென மின் துண்டிப்பு ஏற்படுவதாலும் , திடீரென மின் அதிகம் வருவதனாலும். மின் உபகரணங்களான, மின் குமிழ்கள், குளிரூட்டிகள், தொலைக்காட்சிகள், கிரைண்டர்கள், போன்ற பொருட்கள் அடிபடுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
சில மின் கோபுரங்களில் வெடிச்சத்தங்கள், நெருப்புப் பொறிகள் தெறிப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. மின் கம்பங்களின் உச்சியில் ஒக்சைட் படிவுகள் அடிக்கடி நடைபெறுகிறது. இதனை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டிய தேவை உள்ளது.
ஆகவே, இப்பிரதேச மக்கள் எதிர் கொள்ளும் மின்சாரசேவை தொடர்பான பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொடுக்கக் கூடிய அமைப்பில் முசலிப் பிரதேசத்திற்கு தனியான உப மின்சாரசபை ஒன்று அமைக்கப்பட வேண்டும். அத்துடன் உப மின் நிலையப் பொறியியலாளர் தலைமையிலான குழுவினரும் உரிய வாகன வசதிகளும் இங்கு செய்யப்பட வேண்டும். என முசலி மக்கள் தெரிவிக்கின்றனர்
முசலிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மின்சாரப் பிரச்சினை
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:


No comments:
Post a Comment