துபாயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர் உட்பட மூவர் பலி
புஜைரா நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில், கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகளும், ஒரு இலங்கை பிரஜையும் கொல்லப்பட்டனர் என்று புஜைரா நகர பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். துப்பரவு செய்யும் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த 19 பேர் பஸ்ஸில் ஏற்றி செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டது.
பஸ்ஸை அதன் சாரதி வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது பஸ் நடை பாதையில் மோதி விபத்துக்குள்ளாகியது என்று விசாரணைகளை நடத்திய வரும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் மூன்று போர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுளளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துபாயில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர் உட்பட மூவர் பலி
 
        Reviewed by Admin
        on 
        
July 15, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
July 15, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment