வட மாகாண சபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நாளை
கடந்த வெள்ளிக்கிழமை வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் கட்டளையை தேர்தல்கள் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.
அந்த வகையில் ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கி ஒரு வாரத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் விடுக்கவேண்டும் என்பதற்கு அமைய நாளை 11 ஆம் திகதி வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
முதலில் வட மாகாண சபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தவுடன் தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வேறு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற வாக்காளர்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான செயற்பாடுகளும் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.
அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை அல்லது 28 ஆம் திகதி சனிக்கிழமை வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் இதே தினத்தில் நடைபெறும் என்றும் தெரியவருகின்றது. இந்த இரண்டு மாகாண சபைகளும் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
.
வட மாகாண சபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நாளை
Reviewed by Admin
on
July 10, 2013
Rating:

No comments:
Post a Comment