இந்திய , உள்ளூர் இழுவைப்படகுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்
வட பகுதி மீனவ சமூகத்தின் நன்மை கருதி இந்திய இழுவைப்படகு மற்றும் உள்ளுர் இழுவைப்படகு மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் உடன் நிறுத்துங்கள் என மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் மற்றும் வன்னி அமைச்சர்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,
30 வருட போராட்டத்தின் பிற்பாடு மக்கள் தங்களின் இயல்பு வாழ்கைக்கு சிலர் திரும்பியும் சிலர் திரும்பிக்கொண்டும் இன்னும் பலர் இன்னமும் மீள் குடியேற்றம் கூட செய்யப்படாமல் வடபகுதியிலே வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இவ்வளவு காலமும் சொத்தை இழந்து சொந்தத்தை இழந்து பரிதவித்தக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதே உண்மை.
இருந்தும் யுத்தம் முடிவிற்கு வந்து விட்டதென்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பார்க்கும் போது சிறு மீனவர்களாகிய வடபகுதி மீனவர்கள் இன்னமும் யுத்தத்தின் கோரபிடியில் இருந்து தான் தங்களின் வாழ்நாட்களை கழித்தக்கொண்டு போகக் கூடிய நிலையை காணக்கூடியதாக உள்ளது.
காரணம் யுத்தம் நடை பெற்றகாலப்பகுதியில் எறிகணைதாக்கத்தினாலும் வான் தாக்குதலினாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது இந்திய இழுவைப்படகுகளின் வருகையினாலும் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றமையினாலும் இவற்றுடன் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு தொழிலினை மேற்கொண்டு வருவதினாலும் வடபகுதி கடற்பரப்பிற்குள் வருகைதந்து அதாவது மன்னார் , யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதியில் சிறு மீனவர்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டுக் கொண்டு வருவதனை எம்மால் உணர முடிகின்றது.
அரச அதிகாரிகளே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே கௌரவ அமைச்சர்களே புத்திஜீவிகளே சமூக மட்டதலைவர்களே எமது வடபகுதி சிறு மீனவர்களின் அவலநிலையினை பாருங்கள்.
இவ்வாறான பிரச்சினை ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிகரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது.
இவ்வாறான விடயம் உங்களுக்கு தெரிந்தும் கண்ணிருந்தும் குருடர்களாக திரிவது எமக்கு மனவருத்தத்தினை உண்டு பண்ணுகின்றது. ஒரு கணம் சிந்தியுங்கள்.
இவ்விடயம் தொடர்பாக சிறு மீனவர்களுக்கு சார்பான ஏதாவது முடிவு எடுத்துள்ளீர்களா? அல்லது கிராம மட்டத்தில் கூட்டங்களையாவது வைத்து சிறு மீனவர்களை அறிவூட்டி உள்ளீர்களா? இந்திய இழுவைப்படகுகளின் வருகையினாலும் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் வருகை அதிகரித்துகாணப்படுகின்றமையினாலும் இவற்றுடன் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு தொழிலினை மேற்கொண்டு வருவதினாலும் இதனை தடை செய்வதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றீர்கள் இதனை பார்க்கும் போது தேர்தல் காலங்களிலே மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகள் எல்லாம் வெறுமனே வாய்பேச்சாக மாத்திரமே உள்ளதே தவிர செயற்பாடுகளில் மக்களுக்கு ஒன்றும் இல்லாத நிலை தான் தற்போது காணப்படுகின்றது.
மன்னார் மாவட்ட மீனவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையினை ஏனைய மீனவ சங்கங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே!
எமது கடல் வளங்களை அனுபவிக்க முடியாதவர்களாக நாம் இருக்கும் போது எந்த வித அனுமதியுமின்றி எமது கடற்பரப்பினுள் இந்திய நாட்டு மீனவர்கள் அத்து மீறி வருகை தந்து எமது கடல் வளங்களை அளித்து விட்டு போவதை இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
இவர்கள் இலங்கை அரசிடம் பாஸ் அனுமதி பெற்று எமது பகுதிக்குள் வருகை தந்துமீன் பிடியில் ஈடுபடுகின்றார்களா? அல்லது எமது கடல் வளம் அவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதா? அல்லது இலங்கை குடியுரிமைப் பெற்று தொழில் புரிகின்றனரா? இதற்கான பதிலை இந் நாட்டின் கௌரவ மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தான் பிரஜைகளாகிய எங்களுக்கும் சிறுமீனவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்.
அரசஅதிகாரிகளே எமது வட பகுதி சிறு மீனவர்கள் கிழமையில் 6 நாட்கள் நிம்மதியாக தொழில் செய்த காலத்தில் தங்களின் வாழ் நாட்களை மிகவும் சந்தோசமாக கழித்து வந்தார்கள். ஆனால் தற்போது கிழமையில் 3 நாட்கள் மாத்திரமே செல்லக் கூடிய நிலைகாணப்படுகின்றது.
காரணம் இந்திய இழுவைப்படகின் வருகை.
சிறு மீனவர்கள் கடலுக்குள் சென்று பெறுமதி மிக்க பல இலட்சகணக்கான வலைகளை மீன் பிடிப்பதற்காக கடலினுள் போடுகின்றார்கள் மறு நாள் காலையில் வலையினை பிடிக்க சந்தோசமாக போகின்ற போது கிடைக்கின்ற மிகப் பெரிய இலாபம் இந்திய இழுவைப்படகு சிறுமீனவர்களின் வலைகளை வெட்டிக் கொண்டும் இழுத்துக்கொண்டு போவது தான்.
இவ்வாறாக பாதிக்கப்பட்ட பலமக்கள் பல லட்சக்கணக்கான மீனவ உபகரணங்களை அன்னியரிடம் தாரைவாத்துவிட்டு சோகத்தில் இருப்பதை எமது மன்னார் மாவட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறாக பாதிக்கப்பட்ட சிறு மீனவர்கள் எத்தனை பேருக்கு தங்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள் கடற்றொழில் திணைக்களஅதிகாரிகள்?
சற்று சிந்தியுங்கள் நாங்கள் கண்ணாடி கூட்டிற்குள் இருந்து கொண்டு பிரச்சினைகளை கேட்டறிந்தால் மட்டும் போதாது மீனவ கிராமத்திற்கு சென்று களத்தில் மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கான சரியான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவைப்பாடு ஒவ்வொரு கடற்றொழில் சார்ந்த அரச அதிகாரிகளுக்கு உண்டு என்பதனை மறந்து விட வேண்டாம்.
இது மட்டுமன்றி நாளாந்தம் எமது கடற்பகுதிக்குள்ளே 2000 மேற்பட்ட பாரிய இழுவைப்படகுகள் எமது குறுகிய கடற்பரப்பில் தொழில் புரிந்து வருகின்றமை நீங்கள் அறிந்த உண்மையானவிடயம்.
இது மட்டுமன்றி வடபகுதிக்குள் வருகை தரும் இவர்கள் தற்போது இதையும் தாண்டி கற்பிட்டி புத்தளம் ஆகிய பகுதிக்கும் சென்று தங்களின் ஆதிக்கத்தினை செலுத்தி வருக்கின்றார்கள் இதனை மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு குடும்பம் வன்மையாககண்டிக்கின்றது.
இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கத்தில் தென்னிலங்கை மீனவர்களின் வருகையும் எமது பகுதியில் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டு போகக் கூடிய நிலைகாணப்படுகின்றது.
ஒட்டு மொத்தத்தில் பார்க்கப்போனால் இன்னும் ஓரிரு வருடங்களில் வடபகுதி கடற்பரப்பு இந்திய இழுவைப்படகுகளுக்கும் தென்னிலங்கை படகுகளுக்கும் சொந்தமாகி வடபகுதிமக்கள் அன்னியர்களிடம் கையேந்திநிற்கும் நிலை உருவாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளி விடவேண்டாம் என மன்னார் மாவட்ட மீனவஒத்துழைப்பு பேரவை குடும்பம் சார்பாக கேட்டுநிற்கின்றோம்.
எனவே இப்பாதிப்பில் இருந்து கடல் வளத்தைப் பாதுகாத்து எமது அடுத்தடுத்து வருகின்ற தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பாரிய கடமைப்பாடு ஒவ்வொரு அரச அதிகாரிக்ளுக்கும் மீனவ தலைவர்களுக்கும் கிராம மட்ட அமைப்புக்களுக்கும் உள்ளது என்பதனை மறக்க வேண்டாம்.
எமது சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து இவ்வாறான பிழையான நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய மீனவ மக்கள் வியாபாரம் ஒன்றினை அமைத்து தேசிய மீனவ கொள்கையின் மூலம் நிரந்தர தொழில் ஒன்றினை உருவாக்கி மீனவ வளமும் இயந்திர உபகரணங்களினதும் உரிமையை தகுந்த மீனவர்கள் அடைய செய்து இதனுடாக எமது வடபகுதி மீனவ சமூகம் வறுமையை ஒழித்து உணவினை பாதுகாப்பதுடன் தேசிய வளங்களையும் பாதுகாப்பதற்கான சட்ட மூல கொள்கை ஒன்றினை நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.
ஆழ்கடலில் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட சிலிண்டர் கொண்டு கடல் அட்டை சங்கு குளித்தல் போன்ற தொழிலை கரையோரப் பகுதியில் நிறுத்தி இத் தொழிலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் தொழில் புரிவதை கடற்றொழில் அதிகாரிகள் சிறு மீனவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
நாம் இலங்கை அரசுக்கும் அதன் சட்டத்திற்கும் கட்டுப்பட்ட பிரஜைகள் என ஏற்றுக்கொள்ளும் அதே நேரம் மீன்பிடியை நம்பி தமது ஜீவனோபாயத்தை நடத்தும் எமது மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றுவது தற்போதைய அரசின் கடமைப்பாடாக உள்ளது.
எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறும் என்றால் இது ஒருதொடர் கதையாகத்தான் வடபகுதி மீனவர்களுக்கு இருக்கும் அதேவேளை மீனவ குடும்பங்கள் பட்டினிசாவினை எதிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே எமது இந்த கோரிக்கைகள் நிறைவேற்றபட வேண்டும் என அரச அதிகாரிகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ அமைச்சர்கள் புத்திஜீவிகள் சமூக மட்ட தலைவர்கள் அனைவரிடமும் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை கேட்டுக்கொள்வதாக அதன் இணைப்பாளர் எஸ். சுனேஸ் சோசை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by Admin
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment