கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற பஸ் விபத்து: மூவர் பலி
குறித்த தனியார் மினி பஸ் வண்டி மன்னம்பிட்டி கோட்டாஎலிய பகுதியில் வைத்து மரமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி முகாமையாளர்களுக்கான செயலமர்வொன்றை முடித்து விட்டு நேற்றிரவு மட்டக்களப்புக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி முகாமையாளர்கள் என மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.
இதில் பயணித்த 21 சமுர்த்தி முகாமையாளர்களில் மூன்று சமுர்த்தி முகாமையாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பஸ்வண்டியின் சாரதி நடாத்துனர் அடங்களாக 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மன்னம்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயப்பட்டவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை விபத்து தொடர்பான விசாரணைகளை மன்னம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில், சுந்தரம் உதயகுமார் - (கல்லாறு), எஸ்.ஜீவானந்தம் (வாழைச்சேனை – புதுக்குடியிருப்பு), பேரின்பம் சபேசன் (ஆரையம்பதி) ஆகியோரே பலியாகியுள்ளனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற பஸ் விபத்து: மூவர் பலி
 Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 12, 2013
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment