FIFA வின் நிர்வாக முகாமைத்துவ கற்கை நெறியில் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்திய மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன செயலாளர்
இதில் மன்னார் மாவட்டம் சார்பில் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன செயலாளர் திரு ப ஞானராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளார். இவர் மன்னார் மாவட்டத்தை உதைபந்தாட்ட துறையில் இலங்கையில் மிளிரச் செய்து பின்னர் இந்தியா தென்கொரியா ஈரான் என சர்வதேச மட்டம் வரை மிளிரச் செய்து பெருமை தேடித்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தின் உதைபந்தாட்ட சொத்தாகிய புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியராகவும் இக்கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் மன்னார் மாவட்டத்தின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாகவும் சேவையாற்றி மன்னாரின் உதைபந்தாட்டத்தின் வெற்றிகளை தக்கவைத்து வருபவர்.
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் தொடர் தேசிய வெற்றிகளின் சரித்திர நாயகனாக விளங்கிக்கொண்டிருக்கும் இவர் தற்போது மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன செயலாளராக தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக நிர்வாக ரீதியாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறான ஒருவர் எமது மாவட்டத்திற்கு கிடைத்திருப்பது எமக்கு பெருமையே.
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட கழகங்கள் இரசிகர்கள் ஆதரவாளர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.
FIFA வின் நிர்வாக முகாமைத்துவ கற்கை நெறியில் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்திய மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன செயலாளர்
Reviewed by Admin
on
July 08, 2013
Rating:
Reviewed by Admin
on
July 08, 2013
Rating:



No comments:
Post a Comment