அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் புதிய சட்டம்

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடிரியுமை வழங்குவது சம்பந்தமான புதிய சட்டம் வரையப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சட்டவரைவு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வரையப்பட்டுள்ள புதிய சட்டம் பரிசீலனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.


 இது குறித்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இரட்டை குடியுரிமை பெற ஒரு தடவை விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

 அந்த விண்ணப்பங்கள் ஏற்கனவே ஒப்புதலுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளன. புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், திருத்தங்கள் இருந்தால், மீள் விண்ணப்பங்களை செய்ய முடியும் என்றார்.

 அதே வேளை இரட்டை குடியுரிமை வழங்கும் போது, விண்ணப்பித்தவர்களின் பின்னணி உள்ளிட்ட விபரங்கள் தொடர்பில், ஆராய்ந்து, தகுதியானவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.


வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் புதிய சட்டம் Reviewed by Admin on July 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.