அவயங்களை இழந்தோருக்கான நடமாடும் சேவை.
மன்னார் மெத்தா பவுண்டேசன் நிறுவனத்தினால் அவயங்களை இழந்தவர்களுக்கடிhண செயற்கை அவயங்கள் வழங்கும் நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மெத்தா பவுண்டேசன் நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி சிங்கிலேயர் பீற்றார் தெரிவித்தார்.
குறித்த நடமாடும் சேவை எதிர் வரும் 5 ஆம் திகதி மாங்குளம் தமிழ் மகா வித்தியாலயத்திலும்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மணற்குடியிருப்பு மீனவர் அபிவிருத்திக் கட்டடத்திலும் இடம் பெறவுள்ளது.
பாடசாலை மாணவர்கள் உட்பட பொருத்தப்பட்ட செயற்கை அவயங்களை இழந்தவர்களும் இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றி பயன் பெற முடியும்.

இந்த நடமாடும் சேவையின் போது மருத்துவர் ஒருவரது பரிசோதனைக்குப்பின்னர் சார்பு உறுப்புக்களை உடனடியாக பொருத்த முடியும் எனில் உடனடியாகவும்,உறுப்புக்கள் தேவைப்படுபவர்களுக்கு அதற்காண அளவுகளும் எடுக்கப்படுவதுடன் செயற்கை அவயங்களுக்கான திருத்தப்பணிகளும் இடம் பெறவுள்ளதாக மன்னார் மெத்தா பவுண்டேசன் நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி சிங்கிலேயர் பீற்றார் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(02-07-2013)
அவயங்களை இழந்தோருக்கான நடமாடும் சேவை.
Reviewed by NEWMANNAR
on
July 02, 2013
Rating:

No comments:
Post a Comment