மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது: ஜனாதிபதி
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படாத காரணத்தினால் வடக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் பிரச்சினை கிடையாது.
நாட்டுக்கு பாதகம் ஏற்படக் கூடிய எந்த விடயத்தையும் நான் செய்ய மாட்டேன். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நாடாத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பை கூட்ட முடியும்.
30 ஆண்டு போரின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியை உலக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
தயா மாஸ்டரை வேட்பாளராக இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். வேட்பாளர் தெரிவுப் பணிகளை நான் மேற்கொள்ளவில்லை. அவற்றை அமைச்சர் டலஸ் அழப்பெருமவே மேற்கொண்டார்.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது: ஜனாதிபதி
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:

No comments:
Post a Comment