அண்மைய செய்திகள்

recent
-

பஸ்களில் இலஞ்சம் வாங்கிய பொலிஸார் கைது

நீண்ட தூர பயணத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களிலிருந்து இலஞ்சம் வாங்கிய பல பொலிஸ்காரர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்துள்ளது.

 பொலிஸ் மா அதிபர் உருவாக்கியுள்ள விசேட உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்களே இவ்வாறான கைதுகளை மேற்கொள்வதாகவும் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் புத்தளம், அனுராதபுரம், கருவலகஸ்வௌ மற்றும் தப்போவ ஆகிய பிரதான வீதிகளிலேயே அதிகமாக இடம்பெற்று வருகின்றது.

 வாகன சாரதிகள் இழைக்கின்ற குற்றத்திற்காக அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதனை தவிர்ப்பிதற்காக அவர்களிடமிருந்து 300 ரூபா இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 அவ்வாறு இலஞ்சம் வாங்கியவர்களில் இரண்டு பொலிஸார் முந்தல் எனுமிடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதிகளிடம் இலஞ்சம் பெறும் பொலிஸாரை கைது செய்வதற்காக பஸ்களில் பொலிஸார் சாதாரண உடைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தலைமையகம் அறிவித்துள்ளது

பஸ்களில் இலஞ்சம் வாங்கிய பொலிஸார் கைது Reviewed by Admin on August 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.