மன்னாரில் யுவதி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு.
மன்னார் விடத்தல் தீவைச்சேர்ந்த ஏ.சுகன்னியா(வயது-17) என்ற யுவதியே காணாமல் பேயுள்ளார். குறித்த யுவதி தனது உறவினர்களுடன் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில் மன்னார் விடத்தல்தீவில் உள்ள தனது பெற்றோரிடம் வருவதற்காக நேற்று முன் தினம் புதன் கிழமை யாழப்பாணத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரோடு குறித்த யுவதி மன்னார் வருகை தந்துள்ளார்.
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் மதியம் 1 மணியளவில் நின்ற போது அழைத்து வந்த உறவினர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் அந்த யுவதி நின்ற இடத்திற்கு சென்ற போது யுவதியும்,அவர் வைத்திருந்த உடுப்பு பையுடன் காணாமல் போயுள்ளார்.
அவரை தேடியும் எங்கும் இல்லாத நிலையில் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று காலை முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த யுவதியும்,அவருடய பெற்றோர்களும் இந்தியாவில் வசித்து வந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் இலங்கை வந்து விடத்தல் தீவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் யுவதி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு.
Reviewed by Admin
on
August 10, 2013
Rating:
No comments:
Post a Comment