அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளை: சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் வர்த்தகரிடம்  கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் சந்தேகநபர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் பொலிஸார் நால்வர் உட்பட எட்டு பேருக்கான விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பிடியாணையின் பிரகாரமே குறித்த சந்தேநபர் கைது செய்துசெய்யப்பட்டதாகவும், கொள்ளை இடம்பெற்ற தினமே குறித்த நபர் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டதாகவும் அந்த பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஏற்கெனவே கொண்டுவந்தனர்.

மேற்படி வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் சந்தேகநபர்களுக்கான விளக்கமறியலை நீடித்தார்.

வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தை நடத்துகின்ற கணபதிப்பிள்ளை தேவநேஷ்வரன் கொழும்பு,கொம்பனிவீதியிலுள்ள சம்பத் வங்கியிலிருந்து கோடி ரூபா வெளிநாட்டு பணத்தை பெப்ரவரி 12 ஆம் திகதி  எடுத்துக்கொண்டு சென்றபோதே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றது.

சம்பத் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு நவம் மாவத்தையூடாக வானில் சென்றுக்கொண்டிருந்தபோது போக்குவரத்து பொலிஸ் சீருடையில் நின்றுக்கொண்டிருந்த ஒருவர் வானத்தை நிறுத்தினார்.

வாகனம் நிறுத்தப்பட்டதும் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பென்டர் வாகனத்திலிருந்து நால்வர் இறங்கினர் அவர்கள் நால்வரும் என்னையும் எனது வாகனத்தின் சாரதியையும் டிப்பென்டர் வாகனத்திற்குள் பலவந்தமாக தள்ளி ஏற்றிக்கொண்டுச் சென்றதுடன் பணத்தை அபகரித்துக்கொண்டு கோட்டை பகுதியிலுள்ள பாலடைந்த இடத்தில் தங்களை விட்டுவிட்டுச்சென்றுவிட்டனர் என்று அவர் நீதிமன்றத்தில் விபரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கொள்ளையடிக்கப்பட்ட ஒருகோடி ரூபாவிலிருந்து 35 இலட்சம் ரூபா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளை: சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Admin on August 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.