அண்மைய செய்திகள்

recent
-

புதியவரைபடத்தில் இலங்கையைச் சுற்றி அழுக்குகள் படிந்த மாசு வளையம்

இலங்கையை சுற்றியுள்ள கடற்சூழல் கழிவுப் பொருட்களால் மாசுபடுத்தப்படுகின்றது இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் எதிர்நோக்குகின்றன என சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜெகத் குணசேகர தெரிவித்துள்ளார்.

 இந்து சமுத்திர சூழல் மாசடைதலை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைபடத்தில் இலங்கையைச் சுற்றி அழுக்குகள் படிந்த ஒரு மாசு வளையம் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந்த வரைபடத்தை கடற் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜெகத் குணசேகர, இலங்கையை சுற்றியுள்ள கடற்சூழல் விவசாய இரசாயனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் மாசுபடுத்தப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களும் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.

 அதன்படி விவசாய இரசாயனங்கள், நிலம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து வழிந்தோடி வரும் நீர் என்பவற்றினால் கடற்பாசியின் வளர்ச்சி, இறந்த பகுதிகளின் மீள் உற்பத்தித்திறன் ஆகியற்றைப் பாதிக்கிறது.

 இதனைத் தடுப்பதற்கு அரச நிறுவனங்களுடன் கடற் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையும் இணைந்து விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் மாசுக்களைக் கொட்டுவதை தடுக்கும் முயற்சிகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


புதியவரைபடத்தில் இலங்கையைச் சுற்றி அழுக்குகள் படிந்த மாசு வளையம் Reviewed by Admin on August 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.