அனைத்து இன மக்களும் தமது கலாச்சார மரபுகளை பேணி சுதந்திரமாக வாழும் உரிமையும் , சுதந்திரமாக வாக்களிக்க உரிமையும் உடையவர்கள்-சுனேஸ் சூசை
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,
இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் நாட்டில் காணப்படும் அனைத்து விதமான உரிமைகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் வடமாகாணத்தை பொறுத்தவரையில் 30 வருட போராட்ட காலத்தின் பின்னர் நாட்டில் சமாதானமும் சுதந்திரமும் நிலை நாட்டப்பட்டுள்ளது என பல மட்டத்திலும் பரவலாக வாய் மூலமும் கலந்துரையாடல்கள் மற்றும் ஊடகங்கள் மூலமும் தென்னிலங்கை மக்களுக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் எடுத்துக் கூறிகொண்டு இருக்கும் நிலை தற்போது அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த விடயம் வெறுமனே வாய்பேச்சாகத்தான் வடபகுதியில் காணப்படுகின்றது.
தற்போதைய இலங்கை அரசாங்கம் வடபகுதியிலே அபிவிருத்தி பணிகளை செய்து கொண்டுவருகின்றது.
குறிப்பாக வீதிகளை புனரமைப்பு செய்கின்றார்கள். வடக்கின் வசந்தம் ,திவிநெகும திட்டம் இன்னும் பலவேலைத்திட்டத்தினை வடபகுதியிலே மேற்கொண்டாலும் இவ் விடயங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக கிடைக்கின்றனவா என எண்ணும் போது அது கேள்வி குறியாகத்தான் இருக்கின்றது.
இன்னமும் கூறப்போனால் யுத்தத்தின் பிற்பாடு வெளியேற்றப்பட்ட தழிழ் முஸ்லிம் மக்கள் இன்னமும் தங்களின் சொந்த வாழ்விடத்திற்கும் சொந்தகாணிக்கும் சென்று மீள்குடியேற முடியாத நிலையில் காட்டிற்குள்ளும் முகாமிற்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது.
வடபகுதியில் மக்களின் காணி கொள்ளை இடம் பெறுகின்றது.மக்களின் காணிகளை இராணுவத்தினர் தங்களின் பாதுகாப்பிற்காக பறித்து வைத்துள்ளனர்.
அரச கட்சியில் தேர்தலில் போட்டி இட்டு மக்களின் வாக்குகளை பெற்று தற்போது அமைச்சர்களாக இருப்போருக்கு அரசியல் வாதிகளாக இருப்போருக்கும் மக்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு முடியாதா? அல்லது அரசாங்கத்திற்கு நீங்களும் விலை போய் விட்டிர்களா? அமைச்சர்களே அதிகாரிகளே பாராளுமன்ற உறுப்பினர்களே பிரஜைகளாகிய வட பகுதி மக்களுக்கு தற்போதைய அரசின் நிலைப்பாட்டினை கூறுங்கள்.
அனைத்து இன மக்களும் தமது கலாச்சார மரபுகளை பேணி சுதந்திரமாக வாழும் உரிமையும் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையும் உடையவர்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.
அன்பிற்கினிய வடபகுதி தமிழ் முஸ்லிம் உறவுகளே. அற்பத்தனமான பொருட்களுக்காகவும் அற்பத்தனமான வேலைக்காகவும் பிரஜைகளாகிய நீங்கள் விலை போகவேண்டாம்.
தேர்தல் காலங்களில் பல அமைச்சர்களினாலும் அரசியல்வாதிகளினாலும் அள்ளி இறைக்கின்ற பணத்திற்காக விலை போகவேண்டாம் .
ஆனால் மக்களாகிய நீங்கள் உணரவேண்டும் வெறுமனே உங்களுக்கு இவர்கள் தரும் பொருட்களோ அல்லது பணமோ தங்களின் சொந்த பணத்தில் இருந்து ஒருபோதும் உங்களுக்கு தரமாட்டார்கள் .
மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பணத்தினை இவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்தி தங்களை பெருமைப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதனை மறக்கவேண்டாம்.
இன்று எமது பகுதியில் என்ன நடக்கின்றது. படித்த பட்டம் பெற்ற எத்தனையோ தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் காணப்படுகின்ற போதும் எமது பகுதியில் எத்தனை இவ்வாறான நபர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி இருக்கின்றார்கள்? சற்று சிந்தியுங்கள்.
எத்தனை பேர் வேலை வாய்ப்பினை பெறுவதற்காக பல இலட்சம் ரூபாகொடுத்திருக்கின்றீர்கள்? எத்தனை பேர் அவர்களின் காரியாலயங்களில் சென்று ஏமாந்து இருக்கின்றீர்கள்? ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் படித்தவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு .
இதனை படித்த பட்டம் பெற்ற இளைஞர் யுவதிகள் மறந்து விலை போய் கொண்டு இருக்கின்றீர்கள்? இந்த நிலை மாறவேண்டும் என்றால் பாதிக்கப்பட்ட சழூகம் என்றரீதியில் எல்லோரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அன்பான உறவுகளே!
இப்போதாவதுசிந்தியுங்கள். எமது பகுதியில் என்ன நடக்கின்றது என்று. ஆனால் ஒவ்வொரு பிரஜைகளும் தங்களின் வாக்குகளை சரியான முறையில் போடுவதற்கும் தற்கால நிலமையில் நாம் யாரை வடமாகான தேர்தலில் வெற்றியடைய செய்யவேண்டும் என்பதனையும் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் தங்களின் விருப்பத்திற்குஅமைவாக வாக்களிக்கவும் அவர்களுக்கு சந்தர்ப்பத்தினை கொடுக்கவேண்டும்.
இந்த வடமாகாணசபை தேர்தலில் கள்ள வாக்குகளை அளிக்கவரும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இவற்றினை கண்காணிக்கின்ற தேர்தல் குழுக்கள் , காவல்துறையினர் இதில் கூடிய ஆர்வத்தினை செலுத்தி இத் தேர்தலில் அனைத்து இன மக்களும் தமது கலாச்சார மரபுகளை பேணி சுதந்திரமாக வாழும் உரிமையும் சுதந்திரமாக வாக்களிக்கு; உரிமையும் அளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை சார்பாகவும் முசலி பிரதேச பிரஜைகள் குழு ஊடாகவும் கேட்டுநிற்கின்றேன்.
அனைத்து இன மக்களும் தமது கலாச்சார மரபுகளை பேணி சுதந்திரமாக வாழும் உரிமையும் , சுதந்திரமாக வாக்களிக்க உரிமையும் உடையவர்கள்-சுனேஸ் சூசை
Reviewed by Admin
on
August 02, 2013
Rating:

No comments:
Post a Comment