'பால்மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது'
இறக்குமதி செய்யப்பட்ட சில பால்மாக்களில் நச்சு இரசாயனம் இருப்பதாக கூறப்படுவதனால் ஏனைய பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியை நுகர்வோர் விவகார அதிகாரசபை மறுத்துள்ளது.
பால்மாவின் விலையை அதிகரிக்க வேண்டுமென பால்மா கம்பனிகள் விடுத்த வேண்டுகோள்களை மேற்படி அதிகாரசபையின் விலைக் கட்டுப்பாட்டுச் சபை நிராகரித்துவிட்டதென அவ்வதிகாரசபையின் தலைவர் றூமி மர்ஸூக் கூறினார்.
கடந்த மூன்று மாத காலத்தில் கேள்வி அதிகரித்தமையால் தமது மாத வருமானம் 75 மில்லியன் ரூபாவிலிருந்து 130 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது என உள்நாட்டு பால்மா உற்பத்திக் கம்பனியான மில்கோ கூறியுள்ளது.
பால்மா நுகர்வு பற்றிய பிரச்சினை காரணமாக தமது உற்பத்திகளின் கேள்வி அதிகரித்துள்ளதாக மில்கோ தலைவர் சுனில் விக்கிரமசிங்க கூறினார். மில்கோ நிறுவனமானது நாளொன்றுக்கு 210,000 லீற்றர் பாலை உற்பத்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
August 10, 2013
Rating:

No comments:
Post a Comment