இலங்கை கடற்படையினரால் மேலும் 74 தமிழக மீனவர்கள் கைது
கோடைக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோர் காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இந்திய மீன்பிடித் திணைக்கள பிரதி பணிப்பாளர் உமா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 65 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி 139 தமிழக மீனவர்கள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய உறுதி செய்யவில்லை.
இலங்கை கடற்படையினரால் மேலும் 74 தமிழக மீனவர்கள் கைது
Reviewed by Admin
on
August 01, 2013
Rating:

No comments:
Post a Comment