மன்னார் தாழ்வுபாடு மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு.
குறித்த மீனவர் சங்கத்தில் சுமார் 300 இற்கும் அதிகமான மீனவர்கள் அங்கம் வகிக்கும் நிலையில் அவர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாது தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும்,சங்கத்தின் கணக்கறிக்கைகள் உட்பட சங்கத்தின் முக்கிய தீர்மானங்களை சங்க உறுப்பினர்களுக்கு காட்டுவதில்லை எனவும்,தாழ்வுபாடு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தாழ்வுபாடு மீனவச்சங்கத்தின் தலைவரினால் சங்கத்திற்கு எவ்வித வருமானமும் கிடைப்பதில்லை எனவும்,எனினும் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை தலைவரும்,ஒரு சில உறுப்பினர்களும் தமது விருப்பத்திற்கு இணங்க கையாள்வதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் தாழ்வுபாடு மீனவர் சங்கத்தின் 25 ஆவது வருட நிறைவு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு தலைவரும்,சங்கத்தின் பணிப்பாளர்களும் திட்டமிட்டுள்ள நிலையில் குறித்த விழாவிற்கு சங்கத்திற்கு சொந்தமான 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை செலவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாழ்வுபாடு கிராமத்தில் பல அடிப்படை குறைபாடுகள் நிலவி வரும் நிலையில் பெருந்தொகை பணத்தினை வீண் விரயம் செய்வது தொடர்பில் மீனவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என தாழ்வுபாடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் தாழ்வுபாடு மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு.
Reviewed by Admin
on
August 05, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment