அண்மைய செய்திகள்

recent
-

விசம் கலந்த உணவையும், மருந்தையும் பல்தேசிய நிறுவனங்கள் தயாரிப்பு- சுகாதார அமைச்சர்

பல்தேசிய நிறுவனங்கள் விசம் உள்ளடங்கிய உணவு வகைகளையும், அதனால் ஏற்படக் கூடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்து பொருட்களையும் உற்பத்தி செய்கின்றன.

 உணவுப் பொருட்களில் உள்ளடக்கியுள்ள விச இரசாயனங்களினால் ஏற்படக் கூடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்து வகைகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு விநியோகம் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 உணவுப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பல பல்தேசிய நிறுவனங்கள் கிருமிநாசினிகள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றன.

 இதனால், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வு கூடமொன்று அவசியம். பொரளை பிரதேசத்தில் இந்த ஆய்வு கூடம் அமைக்கப்பட உள்ளது.

 உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி அதன் ஒத்துழைப்புடன் அதி நவீன ஆய்வு கூடம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


விசம் கலந்த உணவையும், மருந்தையும் பல்தேசிய நிறுவனங்கள் தயாரிப்பு- சுகாதார அமைச்சர் Reviewed by Admin on August 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.