மன்னாரில் இருந்து வரும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனா விபத்தில் படுகாயம்!
மன்னாரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போது இடம்பெற்ற விபத்திலேயே இவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக வரும்போது வானின் குறுக்காக நாய் பாய்ந்ததன் காரணமாக வானில் நாய் அடிபடாமல் தடுக்க முனைந்த போது வானில் பின்புறமாக இருந்த உறுப்பினர் முன்பக்கமாகவிருந்த இருக்கையில் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
இதன்போது மாகாணசபை உறுப்பினரின் வாய்ப் பகுதியில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதுடன் சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுப்பினரின் இணைப்பாளர் தெரிவித்தார்.
மன்னாரில் இருந்து வரும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனா விபத்தில் படுகாயம்!
Reviewed by Admin
on
August 08, 2013
Rating:
Reviewed by Admin
on
August 08, 2013
Rating:


No comments:
Post a Comment