மடு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி-மன்னார் அரச அதிபர் ; எம்.வை.எஸ்.தேசப்பிரிய
கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் திருவிழா எதிர் வரும் 15 ஆம் திகதி சிறப்புத்திருவிழாத்திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு தடவைகள் விசேட கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாக தெரிவித்த அரசாங்க அதிபர் பத்தர்களின் நலன்களை கருத்தில் கொண்டு போக்குவரத்து,சுகாதாரம்,தங்குமிடம்,குடிதண்ணீர் விநியோகம்,மின்சாரம் உள்ளிட்ட மடுத்திருத்தலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதே வேளை திருவிழா தினத்தன்று பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளமையினால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
மடு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி-மன்னார் அரச அதிபர் ; எம்.வை.எஸ்.தேசப்பிரிய
Reviewed by Admin
on
August 11, 2013
Rating:

No comments:
Post a Comment