அண்மைய செய்திகள்

recent
-

தனி­நா­யகம் அடி­களார் நூற்­றாண்­டு­வி­ழா­வை ­முன்­னிட்டு மன்னாரில் மாபெரும் மூன்­றுநாள் விழா

மன்னார் நகரம் விழாக்­கோலம்

தமிழ் மொழியை உலக அரங்கில் ஏற்­றி­வைத்த தமிழ்த்­தாயின் தன்­னி­கரில்லாத் தலை­ம­கனாம் தமிழ்த்­தூது தனி­நா­யகம் அடி­க­ளா­ருடைய பிறப்பின் நூற்­றாண்டு விழா நாளை வெள்ளிக்கிழமை தமிழ் கூறும் நல்­லுல­கெங்கும் நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்­றது.

இந் நூற்­றாண்டு விழாவை முன்­னிட்டு மன்னார் தமிழ்ச் சங்­கத்தின் ஏற்­பாட்டில் மன்னாரில் மாபெரும் விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. வெள்ளி, சனி, ஞாயிறு தினங்­களில் (ஆகஸ்ட் மாதம் 2ஆம் 3ஆம் 4ஆம் திக­தி­களில்) இந்த நூற்­றாண்­டு­வி­ழா­ நி­கழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.
மூன்று நாட்கள் இடம்­பெறும் இவ்­விழாவில் தொடக்­க­விழா, நிறை­வு­விழா உட்­ப­ட ­ஆய்­வ­ரங்­குகள், இலக்­கிய அரங்­குகள், கலை­அ­ரங்­குகள் என எட்டு அரங்­குகள் இடம்­பெ­ற­வுள்­ளன. அனைத்து அரங்­கு­களும் மன்னார் நக­ர­மண்­ட­பத்தில் இடம்­பெறும். இவ்­வி­ழாவில் பங்­கு­கொள்ள இலங்­கையின் பல்­வேறு பகு­தி­களைச் சேர்ந்த தமிழ் அறி­ஞர்கள், கல்­வி­மான்கள், படைப்­பா­ளிகள், எழுத்­தா­ளர்கள் என பலரும் மன்­னா­ருக்கு வருகை தர­வுள்­ளனர்.

ஆகஸ்ட் 2ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 9.00 – 12.00 மணி­வரை தொடக்­க­வி­ழாவும், மதியம் 2.00 – 5.00 மணி­வரை இலக்­கிய அரங்கும் மாலை 6.30 – 9.30 மணிவரை­ கலை அரங்கும் இடம்­பெறும். 3ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 9.00 – 12.00 மணி­வரை ஆய்­வ­ரங்கும், பகல் 2.00 – 5.00 மணி­வரை இலக்­கி­ய­அ­ரங்கும், மாலை 6.30 – 9.30 மணி­வரை கலை அரங்கும் இடம்­பெறும். 4ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9.00 – 12.00 மணி­வரை ஆய்­வ­ரங்கும் பகல் 2.00 – 6.30 மணி வரை நி­றை­வு­ விழாவும் இடம்­பெறும்.

ஆய்­வ­ரங்­குகள் தவிர்ந்த ஏனைய அரங்­கு­களில் ஏரா­ள­மான கலை­நி­கழ்ச்­சிகள் மேடை­யேற்­றப்­ப­ட­வுள்­ளன. 17 பக்­கங்­க­ளைக் கொண்ட மிகப் பெரும் அழைப்­பிதழ் அச்­ச­டிக்­கப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. தொடக்­க­வி­ழாவின் போது ‘தமி­ழாழி’ என்ற பெயரில் நூற்­றாண்­டு­விழா மலர் ஒன்றும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

தனி­நா­யகம் அடி­களாரின் வாழ்­வையும் பணி­க­ளையும் மையப்­ப­டுத்­திய இரண்டு நாள் ஆய்­வ­ரங்கில் யாழ்ப்­பாணப் பல்­கலைக்கழகம், கிழக்குப் பல்­க­லைக்­க­ழகம், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழகம் போன்ற இடங்­களில் இருந்து தமிழ் அறி­ஞர்கள், கல்­வி­மான்கள் ஆய்வுக் கட்­டு­ரை­களைச் சமர்ப்­பிக்­கின்­றனர்.

மன்னார் நகரின் பொது நூல­கத்­திற்கு முன்­பாக உள்ள பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் தனி­நா­யகம் அடி­களாரின் சிலை ஒன்று நிறு­வப்­பட்டு திறந்­து­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதை­விட மன்னார் பனங்­கட்­டுக்­கொட்டுப் பகு­தியில் உள்ள கடலரி வீதி ‘தமிழ்த்­தூது தனி­நா­யகம் அடிகளார் வீதி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது.நிறைவுவிழாவின் ஆரம்பத்தில் மன்னார் பாலத்தில் இருந்து நகரமண்டபம் வரையிலான பண்பாட்டுப் பேரணி இடம்பெறவுள்ளது. இதில் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலைப் படைப்புக்கள் இடம்பெறவுள்ளன.

தனி­நா­யகம் அடி­களார் நூற்­றாண்­டு­வி­ழா­வை ­முன்­னிட்டு மன்னாரில் மாபெரும் மூன்­றுநாள் விழா Reviewed by Admin on August 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.