முல்லைத்தீவில் நாளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்.
வடமாகாண சபை தேர்தலுக்காண தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லலைத்தீவு மாவட்டத்திற்காண மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நாளை 28 ஆம் திகதி புதன் கிழமை மாலை 4 மணிக்கு முல்லைத்தீவு புளியடிச்சந்தி தணணீர் ஊற்று கிராமத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.
-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் , முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசரும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.வி.விக்னேஸ்வரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாயகமும்,பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்,மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான என்.சிறிகாந்தா,தமிழர் விடுதலை கூட்டனித்தலைவர் வீ.ஆனந்த சங்கரி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் ரி.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
-இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுகமும் இடம் பெறவுள்ளது.
(மன்னார் நிருபர்)
(27-08-2013)
முல்லைத்தீவில் நாளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்.
Reviewed by NEWMANNAR
on
August 27, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 27, 2013
Rating:

No comments:
Post a Comment