அண்மைய செய்திகள்

recent
-

யாழில் அரசாங்க அதிபர்களை சந்தித்தார் நவனீதம் பிள்ளை

இலங்கைக்கு ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை, இன்றைய தினமும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியை யாழ். ஆளுனர் அலுவலகத்தில் நவனீதம் பிள்ளை சந்தித்துள்ளார்.

இதன்போது யாழ். ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக காணாமற் போனவர்களின் உறவினர்கள் சிலர் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் யாழ். பொது நூலகத்தில் வட மாகாணத்தின் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும் நவனீதம் பிள்ளை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நூலகத்திற்கு வெளியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றுள்ளது.

காணாமற்போன தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரி காணாமற் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எமது பிராந்திய செயதியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் அரசாங்க அதிபர்களை சந்தித்தார் நவனீதம் பிள்ளை Reviewed by NEWMANNAR on August 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.