அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நடமாடும் சேவை(படங்கள் )

சுதந்திரமானதும்,நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) அமைப்பின் அனுசரனையுடன்,மன்னார் நகர பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை இன்று புதன் கிழமை இடம் பெற்றது.

-மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் இன்று புதன் கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமான குறித்த நடமாடும் சேவை மாலை 4 மணிவரை இடம் பெறவுள்ளது.மேற்படி நடமாடும் சேவையில் புகைப்படம்,முத்திரை  போன்றவை  இலவசமாக வழங்கப்பட்டுகின்றது.

-மன்னார் நகர பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 49 கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பயணடைந்துள்ளனர்.

-வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்குவதற்காகவே குறித்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டதாக மன்னார் பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலர்களுக்காண நிர்வாக அலுவலகர் எஸ்.ஏ.பெணாண்டோ(ராதா) தெரிவித்தார்.






குறித்த நடமாடும் சேவையில் மன்னார் உதவி பிரதேச செயலாளர் வி.பவாகரன்,அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.எஸ்.டியூக்சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



(மன்னார் நிருபர்)

(21-08-2013)
மன்னாரில் நடமாடும் சேவை(படங்கள் ) Reviewed by NEWMANNAR on August 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.