மடு ஆவணித் திருவிழா 2013
இம்மாதம் 6ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மடு ஆவணித் திருவிழாவின் முக்கிய இரு தினங்கள் 14ஆம் 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 15ஆம்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள திருவிழாத் திருப்பலி காலை 6.30 மணிக்கு இடம்பெறும். திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுரப பவனியும் இடம்பெறும். முதல் திருப்பலி காலை 5.30 மணிக்கு இடம்பெறும்.
இம்முறை திருவிழாவில் இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி மேதகு ஜோசப் ஸ்பிற்ரறி, மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை, யாழ் ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, கண்டி ஆயர் மேதகு வியான்னி பெனாண்டோ ஆண்டகை, கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் மேதகு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் மேதகு நோபேட் அன்ராடி ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் மேதகு றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
14ஆம் திகதி வேஸ்பர் ஆராதனைகள் மாலை 6.15 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும். நற்கருணைப் பவனியும் இடம்பெறும்.
மடு ஆவணித் திருவிழா 2013
Reviewed by NEWMANNAR
on
August 13, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2013
Rating:

No comments:
Post a Comment