பால் மா வகைகளுக்கு டிசிடி பரிசோதனை தொடரும்; சுகாதார அமைச்சு
வெளிநாடுகளில் இருந்து இறுக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளில் டிசிடி இரசாயன பதார்த்தம் உள்ளதா என்பது குறித்து துறைமுகத்தில் தொடர் பரிசோதனை செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் உரிய அதிகாரிகளுக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதன் போதே குறித்த தீர்மானங்கள் சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகள் பரிசோதனைகளின் பின்னரே சந்தையில் விநியோகிக்கப்பட வேண்டும் என உணவு ஆலோசனை குழு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் டிசிடி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத பால் மா வகைகள் சந்தைகளில் இருக்குமாயின் அது குறித்து ஆராய்ந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு பாதுகாப்பு கருதி பரிசோதனைகளை நேர்த்தியாக மேற்கொள்ளவென வைத்திய பரிசோதனை நிலையங்களில் உள்ள வசதிகளை அதிகரிப்பது தொடர்பிலும் சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பால் மா வகைகளுக்கு டிசிடி பரிசோதனை தொடரும்; சுகாதார அமைச்சு
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:

No comments:
Post a Comment