நெடுந்தீவுப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு: கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை
நெடுந்தீவில் நீண்ட நாட்களின் பின் மீண்டும் திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக இப்பகுதிகளில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் சமீபத்தில் நெடுந்தீவு பல.நோ.கூ. சங்கப் பணிமனை முன்பாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு துவிச்சக்கர வண்டிகள் காணாமல் போய்விட்டதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேபோல் நெடுந்தீவு மேற்குப் பகுத யில் பல.நோ.கூ. சங்கத்தின் முதலாவது கிளையில் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கிய திருடர்கள் சுமார் ரூபா பத்தாயிரம் ரூபாவிற்கு அதிகமான பெறுமதியான வாய்ந்த பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் மேற்கிலுள்ள உபதபாலக த்தின் கூரையைப்பிரித்துக் கொண்டு உள்ளி றங்கிய திருடர்கள் அங்கிருந்த இரும்புப் பாதுகாப்புப் பெட்டியைத் திறக்கமுடியாத நிலையில் மேசையிலிருந்து சிறிதளவு பண த்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிகின்றது.
பல.நோ.கூ. சங்கத்தில் இடம்பெற்ற திருட்டை அடுத்து அந்தக் கிளையை சங்கம் மூடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரு கின்றனர்.
நெடுந்தீவுப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு: கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:


No comments:
Post a Comment