அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தில் ஒன்று சுழற்சி முறையில் ஐவருக்கு-செல்வம் எம்.பி

வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றியை பெற்றுக்கொண்டுள்ள நிலையில்  இரண்டு போனஸ் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் வோட்பாளர் ஒருவருக்கு வழங்கவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்ளுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட முஸ்ஸிம்  வேட்பாளர் அயூப் அஸ்மீன் என்பருக்கே அந்த போனஸ் ஆசனங்களில் ஒன்று  வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார். 

எஞ்சியுள்ள போனஸ் ஆசனத்தை சுழற்சி முறையில் ஐந்து வேட்பாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் யாருக்கு வழங்குவது என்று இன்னும் ஒரு சில  தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அதன்படி ஐந்து வருட மாகாண சபை பதவி காலத்தில் ஐவர் தலா ஒவ்வொரு வருடம் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கவுள்ளனர். 

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற ஐவருக்கு இந்த போனஸ் ஆசனம் பகிரப்படும் என செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.


-மன்னார் நிருபர்-

(26-09-2013)
கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தில் ஒன்று சுழற்சி முறையில் ஐவருக்கு-செல்வம் எம்.பி Reviewed by NEWMANNAR on September 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.