மன்னார் நீதவானின் பெயரை துஸ்பிரையோகம் செய்த தலைமன்னார் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு நீதவான் அழைப்பானை.
பேசாலையைச் சேர்ந்த உயர் தர மாணவன் ஒருவரை முறைப்பாடு தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்திருந்தனர். இவரது பொலிஸ் பிணை மறுப்பிற்கு
மன்னார் நீதவானின் பெயர் துஸ்பிரையோகம் செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவம் நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தலைமன்னார் பொலிஸார் விசாரனைக்காக அழைக்கப்பட்டனர்.
-மன்னார் பேசாலையைச் சேர்ந்த உயர்தர மாணவன் ஒருவருக்கு எதிராக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்;று செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த மாணவனை தலைமன்னார் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (24-09-2013) விசாரனைக்காக அழைத்திருந்தனர்.
-தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு விசாரனைக்காக சென்ற மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.பின் அன்று இரவு இம் மாணவனை பிணையில் விடுவிப்பதற்காக பெற்றோரை சம்பவ தினமான இரவு 8.30 மணிக்கு பொலிஸார் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்.
-பெற்றோர் உடன் அங்கு சென்றதும் குறித்த மாணவனை பிணையில் விடுவிக்காது மன்னார் நீதிபதியின் உத்தரவிற்கமைய இவரை விட முடியாது என பெற்றோருக்கு தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பெற்றோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
-இந்த நிலையில் குறித்த மாணவன் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு 24 மணி நேரத்தின் பின் மன்னார் நீதிபதி முன்னிலையில் நேற்று புதன் கிழமை(25-09-2013) ஆஜர் படுத்தினர்.
-இதன் போது குறித்த மாணவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரி.வினோதன் மன்னார் நீதிபதியின் உத்தரவிற்கு அமைவாகவே குறித்த மாணவனை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்ததாக அவருடைய பெற்றோருக்கு தலைமன்னார் பொலிஸார் தெரியப்படுத்தியதாக சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
-இந்த நிiயில் குறித்த மாணவனை 10 ஆயிரம் ரூபாய் பெருமதியான சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதவான்,தன்னுடைய பெயரை துஸ்பிரையோகம் செய்தது சம்பந்தமாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும்,சம்மந்தப்பட்ட பொலிஸாரையும் இன்று வியாழக்கிழமை(26-09-2013)மன்னார் நீதிபதி முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுத்திருந்தார்.
-இது இவ்வாறிருக்க மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற போது நீதிமன்றம் வழங்குகின்ற கட்டளைகளை தலைமன்னார் பொலிஸார் நிறைவேற்றுவதில்லை எனவும்,அதே நேரத்தில் தனது பெயரை தலைமன்னார் பொலிஸார் துஸ்பிரையோகம் செய்வதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்த நீதவான் இது தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-மன்னார் நிருபர்
(26-09-2013)
மன்னார் நீதவானின் பெயரை துஸ்பிரையோகம் செய்த தலைமன்னார் பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு நீதவான் அழைப்பானை.
Reviewed by NEWMANNAR
on
September 26, 2013
Rating:

No comments:
Post a Comment